உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நுரை தள்ளும் காத்தான்குடி கடல்; சிறுவர்கள் கொண்டாட்டம்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் இன்று (07) காலை முதல் வெள்ளை நிற நுரையைத் தள்ளி வரும் நிலையில் சிறுவர்கள் அதனை கைய்லெடுத்து விளையாடுவதாக கூறப்படுகின்றது.வடக்கில் அண்மையில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்த நிலையில் இப்போது காத்தான்குடி கடலிலும் நுரை அலைகளூடாக வெளியேறி வருகிறது.சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை.

ஆனால் தற்போது வருகின்ற அலைகளூடாக இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக பறப்பதையும், அதிகளவிலான நுரைகள் கரையோரத்தில் தேங்கி இருப்பதையும் காணமுடிகின்றது.

பஞ்சு போன்ற மென்மையான குறித்த நுரைகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதுடன் காற்றினூடாக குறித்த நுரைகள் மேல்நோக்கி பறப்பதையும் அவதானிக்க முடிகின்றது.இவ்வாறு அலைகளூடாக நுரைகள் வருவதில்லை. இதை வரலாற்றில் முதல் தடவையாக வருகிறது நாம் அறிந்தவரை பல நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு நுரை தள்ளியதாக அனுபவசாலிகள் சொல்லியதை நாம் கேட்டிருக்கிறோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0