உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சேர். பொன். அருணாசலத்தின் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
17 பார்வைகள்

ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடை வள்ளலுமான சேர். பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 9 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சேர்.பொன் அருணாசலம் நிதியத்துடன் இணைந்து, கொழும்பு வடக்கு சைவ பரிபாலன சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள சேர். பொன் அருணாசலத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்துதலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

சேர். பொன் அருணாசலம், பிரித்தானியர்களால் இலங்கை அரச பணிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்குரியவராவார். 1919ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர். பொன் அருணாசலம் தமிழர் – சிங்களவர் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

இலங்கைக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, “இலங்கை பல்கலைக்கழகச் சங்கம்” உருவாகக் காரணமாக இருந்தனால் இவர் “இலங்கை பல்கலைக்கழகக் கல்வியின் தந்தை” எனப் புகழப்படுகின்றார்.

நீதிபதி, மாவட்ட அதிபர் எனப் பல்வேறு அரச பதவிகளை அலங்கரித்த இவர், தலைமைப் பதிவாளர் நாயகமாகப் பணியாற்றிய காலப்பகுதியில் இவர் செய்த சீர்திருத்தங்கள் இன்றும் பேசப்படுகின்றன. 1901ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை இவரது மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. இது இலங்கையின் சமூக, பொருளாதார நிலையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது.

இவரது சேவையைப் பாராட்டி பிரித்தானிய அரசு 1913ஆம் ஆண்டு “சேர்” பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0