உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஏழு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் நீர்கொழும்பு, குடாபாடுவ பகுதியில் சுற்றுலா விடுதி ஒன்றை நடத்தி வரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பயணப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து போதைப்பொருளை கடத்த முற்பட்ட போதே, விமான நிலைய சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருளை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இந்தியாவிற்கு (புதுடெல்லி) கொண்டு வந்துள்ளார்.

அங்கிருந்து எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான AI 277 என்ற விமானம் மூலம் இன்று காலை 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் கார்பன் தாள்களினால் சுற்றப்பட்டு, 15 பொதிகளாக பொதியிடப்பட்டிருந்த நிலையில் 07 கிலோகிராம் 70 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பொதிகளுக்கு மேல் அதிகளவிலான இனிப்புப் பண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் வசிக்கும் தமக்குத் தெரிந்த இலங்கை பெண் ஒருவரே, இதனை இலங்கைக்குக் கொண்டு செல்லுமாறு தம்மிடம் ஒப்படைத்ததாக சந்தேக நபர் சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0