உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
66 பார்வைகள்

போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் நெறிப்படுத்தலுடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் மற்றும் கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பல்வேறு வர்த்தக நிலையங்களை நடாத்துகின்ற வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வலியுறுத்தினார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் கல்முனை மாநகரில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வர்த்தகர்கள் தங்களது கருத்துக்களை ஆரோக்கியமாக முன்வைத்ததுடன் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கொள்ளை மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்ததுடன் உடனடித் தீர்வினையும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0