உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்; வைத்தியரின் மகளுக்கு எதிராக வழக்கு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தான் “குற்றவாளி அல்ல” என பிரதிவாதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0