உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம்; சிறீதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
54 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சொற்போர் மூண்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுகின்றது என்று சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். தையிட்டி போராட்டக் களத்தில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை அதற்கு உதாரணம் காட்டினார்.

அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் என்.பி.பி. அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார்.

இதற்குத் தனது உரையின்போது அமைச்சர் இ.சந்திரசேகர் பதில் வழங்கினார்.

“வடக்கில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பல்பொருள் அங்காடி மற்றும் மதுபானசாலை வைத்துள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் தமக்கான இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பொலிஸ் அராஜகம் என்ற விடயத்தைக் கூறி தமிழ் மக்களைக் குழப்பப் பார்க்கின்றனர்.

சிறீதரனே, சுமந்திரனிடம் நீங்கள் அவதானமாக இருங்கள். தமிழரசுக் கட்சி என்பது சீரழிந்துபோன கட்சியாக மாறியுள்ளது. அந்தக் கட்சி போதைவஸ்து கட்சியாகவும் மாறிவிடக்கூடாது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறவில்லை. அவசரகாலச் சட்டத்தை நாம் தவறாகவும் பயன்படுத்தவில்லை.

தையிட்டி விகாரைப் பிரச்சினையைக்கூட நேர்மையான முறையில் தீர்ப்பதற்கே முயற்சிக்கின்றோம். தமிழ் மக்கள் எம்முடன்தான் உள்ளனர்.” – என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

இதனால் கடுப்பான சிறீதரன் எம்.பி., முதலில் அமைச்சர் திருந்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

என்.பி.பி. அரசின் பொலிஸ் அராஜகம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இடித்துரைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0