உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்- மனோ, திகா எம்.பிக்கள் வலியுறுத்து !

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான இந்த மாத சம்பள உயர்வு ரூ.400 அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உயர்வு 3 அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், 22 தனியார் தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர் தோட்டங்கள் மற்றும் தனியார் சிறு தோட்டங்கள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைச்சின் அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது, அரசுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்பிக்கள் வாக்களித்தோம். அந்த வாக்கெடுப்பின் போதே இந்த ரூ.400 சம்பள உயர்வு அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறித்தான் நான் வாக்களித்தேன்.

இப்போதும் அதையே தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்” என்று தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, மனோ கணேசன் எம்.பி., திகாம்பரம் எம்.பி., கலைச்செல்வி எம்.பி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதுதொடர்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடக செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட திகாம்பரம் எம்.பி., அரசின் ரூ.200 சம்பள உயர்வு கிடைக்கும் என எண்ணுவதாகவும், ஆனால் கம்பனித் தோட்டங்களில் தொழிலாளர்கள் கொண்டு வர வேண்டிய கொழுந்து நிறை தொடர்பில் இப்போதே சர்ச்சை எழுந்துள்ளதாகவும் கூறினார். வழமையை விட அதிக கொழுந்து நிறை கொண்டு வர வேண்டும்.

இல்லாவிட்டால் முழு நாள் சம்பளம் வழங்கப்படமாட்டாது என கம்பனிகள் தொழிலாளர்களிடம் தெரிவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதை அரசு கவனத்தில் எடுக்காவிட்டால், அறிவிக்கப்பட்ட ரூ.400 சம்பள உயர்வு நடைமுறையில் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் எம்.பி.,“எல்லா காலத்திலும், எல்லாப் பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியான கொழுந்து கிடைப்பதில்லை. அதைக் காரணம் காட்டி நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்து வழங்கி விளையாடாமல், அரசே கண்காணிக்க வேண்டும். இது தொழில் அமைச்சின் பொறுப்பாகும். குறிப்பாக அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இதனை உரிய முறையில் கவனத்தில் எடுப்பார்கள் என நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0