உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிழக்கு மாகாணத்தில் சிறுவர், பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க பொலிஸாரின் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பெண்கள் மீதான வன்முறையினை தடுப்பதற்கு பொலிஸ்மா அதிபரினால் உருவாக்கப்பட்டுள்ள சறோஜா வேலைத்திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள்,பஸ்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.மட்டக்களப்பு நகரிலிருந்து சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர தலைமையில் பிரதி பொலிஸ்மா அதிபர் களுபஹன, மட்டக்கள்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லீலாரத்ன,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்எம்.ஜமீல்,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் பண்டார ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.பொலிஸாரின் இந்த விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு அனைவரும் ஆதரவினை வழங்கியதை காணமுடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0