உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
46 பார்வைகள்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (06) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது.

மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருகை தரும் புதிய வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன்பக்க விளக்குகளை ஒளிரச்செய்து அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டுமென்று போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை நுவரெலியாவில் கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

46 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

59 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

64 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

62 0 0