உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அனுராதபுரம் இலங்கை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் நேற்று பொலிஸ் பயிற்சிகளை நிறைவு செய்ததன் பின்னர் வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“போதைப்பொருள் வர்த்தகம் இலங்கையில் பாரிய புற்றுநோயாகப் பரவியுள்ளது. நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளும் போதைப்பொருள் வர்த்தகமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இவற்றை வேரோடு ஒழிப்பதற்குப் பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம், சந்தையில் உள்ள கேள்வி ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில இவ்வருடம் மாத்திரம் 10 ஆயிரம் புதிய உத்தியோகத்தர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் என்பன பெறப்பட்டுள்ளன. அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலிருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஏற்கனவே 5 ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வாண்டு மேலும் 5 ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்குத் தகுந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொலிஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உத்தியோகத்தர்களுக்கான ஏனைய நலன்புரி வசதிகளை உறுதிப்படுத்தவும் அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

பழைய பொலிஸ் முறைகளைக் கொண்டு எதிர்வரும் காலங்களிலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. பொலிஸ் திணைக்களத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸ் சேவைக்குள் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.

தற்போதைய பொலிஸ் சேவையின் வளர்ச்சிக்குப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் அனுபவமிக்க வழிகாட்டல் பெரும் பலமாக உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

46 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

59 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

64 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

62 0 0