உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வெனிசுவேலா மீதான அதிரடி நடவடிக்கை : எரிசக்தி நிறுவனங்களின் பங்குகள் உயர்வு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் இனி எளிதாகப் பயன்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பால், பங்குச் சந்தையில் செவ்ரான் (Chevron) மற்றும் ஹாலிபர்டன் (Haliburton) போன்ற எரிசக்தி நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 7வீதம் வரை உயர்ந்துள்ளன.

அதேவேளை, இந்த அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சர்வதேச பதற்றங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கித் திரும்பியுள்ளனர்.இதனால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,412 டொலாராக அதிகரித்துள்ளது.

மேலும், புவிசார் அரசியல் நெருக்கடிகளால் நாடுகளின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கும் என்ற கணிப்பில் ஐரோப்பிய பாதுகாப்புத் துறை சார்ந்த (Defence Stocks) நிறுவனங்களின் பங்குகளும் 8வீதம் வரை உயர்வைக் கண்டுள்ளன.எனினும், சிதைந்துள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பைச் சீரமைக்க பல பில்லியன் டொலர் முதலீடும் நீண்ட காலமும் தேவைப்படும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0