உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்ததே அநுரவுக்கும்: நாமல் ராஜபக்ச கூறும் காரணங்கள்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்ததே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நடக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொட்டு கட்சியின் புது வருடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,அரசாங்கத்தின் அச்சகத்தில் அச்சாகும் புத்தகத்தில் இருக்கும் தவறை அறிய முடியாத அரசாங்கம்.இவர்கள் எப்படி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள்.அரசாங்கத்திலுள்ளவர்கள் மதம் மற்றும் சம்பிரதாயங்கள் இல்லாமல் ஏதோ ஒரு வழியில் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

வெளிநாடுகளின் தேவைக் கேற்ப அரசாங்கம் கொள்கைகளை தயாரிப்பதென்றால் வெனிசுலாவுக்கு நடந்தது தான் எமது நாட்டுக்கும் நடக்கும்.கல்வி சீர்திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரபலமானவர்களே நேற்று ஊடகவியலாளர் மாநாடு நடத்தியுள்ளனர்.அவர்களுக்கு தீர்மானம் எடுக்க முடியுமா என எனக்கு தெரியாது.

பிரதமர் கூட பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார். பிரதமர் பதவியை ஹரிணிக்கு வழங்கியது இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது.என்பிபி அரசாகத்தில் உள்ள 159 பேருக்கு மட்டும் வேறான ஒரு சட்டம் செயற்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0