உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தரம் ஆறு மாணவர்களுக்கு தொடரும் பிரச்சனை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
75 பார்வைகள்

2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(05) ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஜனவரி 21 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதுவரை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இல்லாதிருப்பது அதிபர்களையும் ஆசிரியர்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக, பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் வழங்கப்பட வேண்டிய மாணவர் வருகைப் பதிவேடுகள் இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை.

தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் தொகுதிகளில் நூற்றுக்கணக்கான இலக்கணப் பிழைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பாடப்புத்தகங்களை தயாரிப்பதில் தகுதியான நபர்கள் உள்வாங்கப்பட்டார்களா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளுக்கு தீர்வாக, குறிப்பிட்ட பக்கங்களை அகற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு சுமார் 8 இலட்சம் பக்கங்கள் அகற்றப்பட வேண்டியுள்ளன. இந்த வேலையை யார் செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், இந்தப் பாடப்புத்தகங்களின் டிஜிட்டல் பிரதிகள் ஏற்கனவே இணையத்தில் பரவியுள்ள நிலையில், அச்சுப் பிரதிகளில் இருந்து பக்கங்களை கிழிப்பதன் மூலம் பிழைகளை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் கல்விப் பொருட்களில் பிழைகள் கண்டறியப்பட்டால், “பக்கங்களை அகற்றுவதையே” அரசாங்கம் ஒரு தீர்வாக முன்னெடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

60 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

64 0 0