உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
97 பார்வைகள்

2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு மாறியுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஆண்டில் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இன்று (05) காலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

இது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முந்தைய உச்சமான 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமாகும்.2025 ஆம் ஆண்டில் 2,362,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வருவாய் ஈட்டப்பட்டதன் மூலம் சுற்றுலாத் துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் மாத்திரம் தனது அமைச்சின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களித்ததாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

60 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

64 0 0