உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மனைவியின் தாலிக்கொடியை கொழும்பு யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்; அதிர்ச்சி தரும் பின்னனி!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம், மனைவி மறைவிடத்தில் இருந்த தாலிகொடியை விசேடம் ஒன்றுக்காக எடுக்க சென்றபோதே கணவனின் குட்டு வெளிப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமணமான வங்கி ஊழியர் ஒருவருக்கு , அவரது நண்பனின் ஊடாக கொழும்பு யுவதி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்த யுவதியுடன் தனித்திருக்க விரும்பி குறித்த வங்கி ஊழியர் மனைவிக்கு தெரியாது அவரது தாலிக்கொடியை எடுத்துகொண்டு கொழும்பு யுவதியுடன் வவுனியா சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் வங்கி ஊழியர் கண் அயர்ந்த நேரத்தில் கொழும்பு யுவதி, வங்கி ஊழியரிடம் இருந்த தாலிக்கொடியை எடுத்துகொண்டு கம்பி நீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண் விழி்த்த பின்னரே வங்கி ஊழியருக்கு , கொழும்பு யுவதி தாலிகொடியுடன் மாயமாகியமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து நண்பனுடன் யுவதியை தேடியபோதும் அவர்களால் கொழும்பு யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.இந்த நிலையிலேயே மனைவி தாலி கொடியை எடுக்க சென்றபோது மறைவிடத்தில் இருந்த தாலிக்கொடியை கணவன் எடுத்து சென்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது.

நண்பருக்கு இரவல் கொடுத்ததாக கணவன் சமாளித்தபோதும், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ததால், நண்பனின் வீடு சென்று மனைவி அது தொடர்பில் வினவியபோதே நடந்த சம்பவத்தால், மனைவியும், நண்பனின் மனைவி்யும் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதுடன், விவாகரத்துவரை சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0