உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இடமாற்றப்படும் பாடசாலை ; வெளியான அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
63 பார்வைகள்

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொத்மலை, தவலந்தன்ன – ரம்பொடை வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை, கொத்மலை, தவலந்தன்ன பகுதியில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார மத்திய நிலையத்தில் தற்காலிகமாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்தார்.

ரம்பொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகிலேயே ஆரம்பமாகியுள்ளது.பாடசாலைக்குச் செல்லும் வீதியின் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் அவர்களின் மனநிலையையும் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொண்டமான் கலாசார மத்திய நிலையத்தில் போதுமான இடவசதி காணப்படுவதால், அங்குள்ள கட்டடங்களில் வகுப்பறைகளை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை கொத்மலை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் சில நாட்களில் அங்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தப் பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 11 வரை 143 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 13 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

60 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

64 0 0