உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தை காப்பாற்ற உதவிகோரிய அரச தலைவர்: பாட்டலி வெளிப்படுத்திய இரகசியம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வருவதற்கு இந்தியாவிடம் கப்பல் தருமாறு கேட்டிருந்தார் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிததுள்ளார்.ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்படியொரு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,இலங்கை முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான சந்தர்ப்பம் அன்று காணப்பட்டது.ஆனால் இன்று சிலர் அதை மறுந்து விட்டனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றி கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்து கொண்டு இலங்கை முழுவதையும் கைப்பற்றும் இறுதி கட்டம் வரை வந்தனர்.

2000 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகங்கள் இலங்கைக்கு வந்தது.ஏனென்றால் புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலரும் புதிய தேசம் அதாவது தமிழீழம் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக.அவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வருவதற்கு இந்தியாவிடம் கப்பல் கேட்டிருந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரை அரசியல் ரீதியில் தோற்கடிக்க சந்திரிகா பல வியூகங்களை வகுத்தார்.

அரசியல் பரவலாக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகாரத்தை வழங்கி சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரை முடக்குவதற்கான திட்டத்தை சந்திரிகா முன்னெடுத்தார்.ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடரான யுத்த வெற்றியில் அவை தோற்கடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0