உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
94 பார்வைகள்

அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது.இதன் முன்னோடித் திட்டம் நாளைய தினம் (06.01.2026) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோயாளர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய ஒரே தட்டில் உணவு வழங்கும் முறைக்கு பதிலாக, சோறு, காய்கறிகள், கீரை, இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகளை தனித்தனியாக வைக்கப்பட்ட விசேட தட்டு ஒன்றில் உணவு பரிமாறப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட உணவு வேளையைக் கண்ட உடனேயே நோயாளருக்கு உணவருந்தும் விருப்பமும் ஆவலும் ஏற்படும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.தற்போது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 2000 நோயாளர்களுக்கு உணவு சமைக்கக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், அதுவும் நாளைய தினம் விசேட வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இங்கு பாரம்பரிய “சமையலறை” அல்லது “kitchen” என்ற பெயருக்குப் பதிலாக “உணவு மற்றும் பானங்கள் திணைக்களம்” என பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.நவீன முறையில் உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுவதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு விரிவுபடுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

61 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

77 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0