உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அறிக்கையை மறைப்பதால் பிரதமர் ஹரிணியே தவறிழைத்துள்ளார்:கம்மம்பில பகிரங்க அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
107 பார்வைகள்

புதிய கல்வி மறுசீரமைப்பின் போது ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில் (English Language First Term Module Grade 6) விடப்பட்டுள்ள தவறு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏன் அரசு வெளியிட தயங்குகிறது என முன்னாள் அமைச்சர் கம்மம்பில கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று (05.01.2026) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,இந்த அறிக்கை உள்ளக விசாரணையில் வெளியிடப்பட்டுள்ளது என தட்டிக் கழிக்கின்றனர்.தவறை செய்தவர் யார் என்று முதல் விசாரணைகளில் தெரியவந்திருப்பதால் அது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தி அரசின் இரண்டாது தலைவரை காப்பாற்றுவதே அரசு செய்ய வேண்டிய கடப்பாடாகும்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிடுவார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.ஆனால் அப்படி ஒன்று வெளியிடவில்லை. உள்ளக விசாரணை அறிக்கையை மறைப்பதென்றால் தவறிழைத்தது பிரதமரோ என்ற சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

61 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

77 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0