உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு; மலையகம் நோக்கி புறப்பட்ட குழு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
89 பார்வைகள்

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கினர். அத்துடன் அந்த பகுதிகளில் வாழும் மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை இழந்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்கையில் இன்னும் ஒரு சில மாதங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாவுள்ளது.

அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பரீட்சைக்கு தயாராகுவதற்கான கற்றல் கையேடுகளை வழங்கும் செயற்பாட்டினை வெண்கரம் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கிய ஐந்து பாடங்களை உள்ளடக்கிய கற்றல் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்தகட்டமாக மலையக மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை வழங்குவதற்காக வெண்கரம் அமைப்பு மலையகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பயணமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. பயணத்தின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பரமேஸ்வரா ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த வழிபாடுகள் மற்றும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வெண்கரம் அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

வெண்கரம் அமைப்பினரின் இந்த செயற்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணை அனுசரணை வழங்குகிறது.

வெண்கரம் அமைப்பின் மாணவர் குழுவினர் தன்னார்வ ரீதியாக சேகரித்த நிதியியலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

61 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

77 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0