உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டி திஸ்ஸ விகாரை ஆர்ப்பாட்ட வழக்கு; சந்தேகநபர்களுக்கு பிணை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
90 பார்வைகள்

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (5) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் அவர்களுக்கு மேலதிகமாக அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், எஸ் ஶ்ரீகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது.

அமைதி வழி போராட்டங்களுக்கு இலங்கை அரசியலமைப்பிலும், தீர்க்கப்பட்ட வழக்குகளின் ஊடாகவும் உரித்துகள் வழங்கப்பட்டுள்ளமையை இன்றைய விசாரணையின் போது, நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனநாயக உரிமையை பாவித்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு 106 ஆம் பிரிவின் கீழ் பொலிஸாரால் வழக்கு தொடர முடியாது என்பதையும் நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கருத்திற் கொண்ட நீதவான் சந்தேக நபர்களை சொந்த பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

61 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

77 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0