உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டி ஆர்ப்பாட்ட வழக்கு; வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்காக நீதிமன்றில் முன்னிலையாகும் சுமந்திரன்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் டிஜிட்டல் நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் இப்போது மேலதிகமாக அழைப்பாணை அனுப்பி அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்குமாக இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகின்றார்.

சூடான வாதப் பிரதிவாதம் இன்று நீதிமன்றத்தில் கட்டவிழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மதத் தலைவரான வேலன் சுவாமியைப் பொலிஸார் கையாண்ட விதம், அவருக்கு எதிராகப் பொலிஸாரால் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் போன்றவை இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபை பிரதேசம் ஒன்றில் சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கட்டப்படும் கட்டமைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டி, அது பற்றி அறிவிக்கும் அதிகாரம் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பிரதேச சபைத் தலைவரோ, செயலாளரோ பிரயோகிப்பர்.

அப்படி இருக்கையில் சட்டவிரோதக் கட்டுமானமானத் தையிட்டி விகாரையின் பக்கத்தில் அத்தகைய சட்டவிரோத கட்டுமானம் பற்றிய அறிவித்தலை பிரதேச சபை நடுமானால் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தில் பொலிஸார் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளருக்குக் கொடுத்துள்ள ‘மிரட்டல்’ அறிவித்தல் இன்று நீதிமன்ற விசாரணையின் போது சில சமயங்களில் மன்றின் கவனத்துக்கு எடுக்கப்படும் வாய்ப்பு உண்டு.

அது பற்றி தெளிவான அறிவுறுத்தல் ஒன்றை – சட்ட வியாக்கியானம் அல்லது விளக்கத்தை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இன்று பொலிஸாருக்கு நீதிமன்ற முகதாவில் வழங்குவார் என்றும் எதிர்பார்க்க முடியும். – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

58 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

74 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0