உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தையிட்டி பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு; காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். எனவே, காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்படாது பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.” – இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தையிட்டியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்குக் கிடையாது. தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.

இது தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கும் இடையிலான பிரச்சினை. இதில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு மேற்படி இரு தரப்புகளும் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். இது இலகுவான காரியம்.

எமது அரசு இந்த விடயத்தில் ஆழ்ந்த கரிசனை செலுத்தியுள்ளது. இரு தரப்புகளும் இணக்கத்துக்கு வருவதற்கான வழிவகைகளை அரசின் விசாரணைக் குழு செய்யும்.

எனவே, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். இந்த விவகாரத்தில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, தையிட்டி காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் காணி உரிமையாளர்கள் செயற்படக்கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0