உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புலிகளை திருப்திப்படுத்தவே டக்ளஸ், பிள்ளையான் கைது; நாமல் கண்டுபிடிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

“புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளைத் திருப்திப்படுத்தவே டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி, ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா. மக்களின் வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்து, மக்களுக்கு சேவையாற்றியுள்ளார். இவ்வாறிருக்கையில் தற்போது அவரைக் கைது செய்தமை அவசியமற்றது.

புலம்பெயர் புலிகளைத் திருப்திப்படுத்தவே பிள்ளையானும், டக்ளஸூம் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட துப்பாக்கி தொடர்பிலேயே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நாள் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

58 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

74 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0