உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2015ஆம் ஆண்டு மண்சரிவில் சிக்கிய மக்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
65 பார்வைகள்

தங்குவதற்கு இடமின்றி துன்பத்தில் வாழ்ந்த லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 24 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமையில் இன்று (04) நடைபெற்றது.2015ஆம் ஆண்டு மண்சரிவு அபாயம் காரணமாக லிந்துலை ஹோல்றீம் பாதிக்கப்பட்டு தோட்டத்தில் பாதுகாப்பான தற்காலிகமாக தங்கியிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கான 24 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் விசேட பரிந்துரைகளுடன் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்துறை மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் ஏற்பாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது.இவ் ஒவ்வொரு வீடும், ஒரு வாழ்க்கை அறை, 2 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது மேலும் இந்த வீடு 10 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம்,வீதி வசதி மற்றும் சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.வீடுகளின் பயனாளிகள்,லிந்துலை நகர சபையின் தலைவர் மலிந்துவ லியனகே ,தோட்ட அதிகாரிகள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

58 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

74 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0