உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை மாவட்ட தமிழருக்கு நிவாரணம் சீராக வழங்கப்பட வேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி. வலியுறுத்து!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
47 பார்வைகள்

அம்பாறை மாவட்ட தமிழருக்கு நிவாரணம் சீராக வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம்(04.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கை அனர்த்தங்கள் ஜாதி, மத, பேதம் பார்த்து நிகழ்வதில்லை.அந்த அடிப்படையில் அண்மையிலே ஏற்பட்ட ரித்வா பேரிடரால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களுக்கு அரச நிவாரணம் சீராகச் சென்றடையவில்லை என்று பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும்.அம்பாறை மாவட்டத்தில் டித்வா பேரிடருக்கு அடுத்த காலப் பகுதியில் மின்சாரம் இன்மையால் உரிய அதிகாரிகள் முறையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் விவரங்களை உரிய வேளையில் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, அம்பாறை மாவட்ட அரச அதிபர் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

35 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0