உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் இறங்கும் சுற்றுலாவாசிகள்….!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
91 பார்வைகள்

வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்.ஆனாலும் இந்த கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் அதிவித்த போதும் அதனை பொறுப்பெடுக்காமல் கடற்கரைக்கு வரும் சுற்றுலா வாசிகள் கடலுக்குள் இறங்கி நீராடுகின்றனர்.

இன்றைய தினமும் (4/1/2026) அதிகளவான சுற்றுலா வாசிகள் மது போதையில் கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று நீராடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.இதனை அவதானித்த ஊர் மக்கள் கடலின் தன்மை தொடர்பாக அவர்களுக்கு கூறிய போதும் அதனை செவிமடுக்காமல் நீராடியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அறிவித்த போது அவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என சுற்றுலா வாசிகளிடம் கூறி சென்றுள்ளார்.

வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலா வாசிகளே உங்கள் கவனத்திற்கு மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை,மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.பொலிஸார் மற்றும் கடற்தொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து விட்டு கார்த்திகை மார்கழி தை மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும் தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் பாதுகாப்பு கருதி புகைப்படங்கள் எடுக்கும் போது ஆழமான பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0