உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இறக்குவானை ஆயுர்வேத வைத்தியசாலை புதிய கட்டடத்துக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் அடிக்கல் நாட்டும் விழா!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
56 பார்வைகள்

இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 107 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (04) நாட்டினார்.அத்துடன், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளுக்கமைய கொடக்கவெல பிரதேச சபைக்குட்பட்ட இறக்குவானை வடக்கு, பெரிய பாராவத்தை, ஸ்ப்ரிங்வூட் தமிழ் வித்தியாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பாதை சுமார் 150இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டீல் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் (04/01) பொது மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் திறந்து வைத்தார்.

இதன் போது பிரதி அமைச்சர் அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தின் பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாதைகளை புணரமைப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைய மாவட்டத்திலே 87 தோட்டப்பிரதேசங்களிலே காணப்படுகின்ற வீதிகளை புணரமைக்கும் பணிகள் இடம் பெற்று கொண்டிருப்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிகழ்வில் கொடக்கவெல பிரதேச சபை தவிசாளர் குலரத்ன தந்தெனிய, பிரதேச சபை உறுப்பினர்களான அப்துல்லா ராஜமாணிக்கம், நிமந்திகா பெரேரா மற்றும் இறக்குவானை தே.ம.ச பிரதேச அமைப்பாளர் குமுது ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

35 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0