உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொதுமக்களுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
65 பார்வைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எமது அண்மைய கள ஆய்வுகளின் போது பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன.

மூடப்படாத கிணறுகள், குழாய்க் கிணறுகள், நீர்த்தாங்கிகள், கூரைப் பீலிகள், பராமரிக்கப்பாடாத மலசலகூடங்கள், மூடப்பட்டுள்ள வீடுகள், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள், கடல் ஓரங்களில் காணப்படும் தோணிகள், படகுகள் என்பன ஆட்கொல்லி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு மிகவும் சாதகமான காரணியாக உள்ளன.

எனவே கிணறுகள், குழாய்க் கிணறுகள், நீர்தாங்கிகள் ஆகியவற்றை நுளம்பு வலைகளால் மூடுமாறும், கூரைப் பீலிகளை அகற்றிவிடுமாறும், மூடப்பட்ட வீடுகள், வெற்று வளவுகளை பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள், வீடுகள், படகுகள், தோணிகள் ஆகியவற்றை நுளம்புகள் பெருகாத வண்ணம் தொடர்ச்சியாக பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் உங்கள் சுற்றாடலில் நுளம்பு பெருகும் சாதனங்களை இல்லாதொழிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். மேற்படி நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உங்களையும் உங்கள் பிள்ளைச் செல்வங்களையும் டெங்கு நோயிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டப்படுவதோடு (தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் மிக மனவருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

வருமுன் காப்போம் வளமாய் வாழ்வோம் டெங்கு மரணத்தை தவிர்ப்போம். நீங்கள் எங்களுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

11 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

53 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

65 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

54 0 0