உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர ஆட்சியிலும் வடக்கு – கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
43 பார்வைகள்

தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளை மாறி மாறி வரும் அரசுகள் கையாண்டு வருகின்றன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.

தையிட்டியில் நேற்று நடைபெற்ற நில மீட்புப் போராட்டம் தொடர்பில் வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டியில் நேற்று நடைபெற்ற நில மீட்புப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு வலுச் சேர்த்துள்ளார்கள். இனிவரும் நாட்களில் இந்தப் போராட்டம் மேலும் வலுவடையும் என நாம் நம்புகின்றோம்.

வடக்கு – கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வலுக்கட்டாயமாக வைப்பதும், அந்த இடங்களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைப்பதும், பின்னர் அந்த இடங்களைச் தமக்குச் சொந்தம் என அறிவிப்பதும், அதிலே சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும், அதனூடாகச் சிங்கள பௌத்த மயமாக்கல்களை ஏற்படுத்துவதும் என மாறி மாறி வரும் அரசுகள் கையாண்டு வருகின்றன.

தையிட்டி நில மீட்புப் போராட்டம் வன்முறைப் போராட்டம் அல்ல. இது அறவழிப் போராட்டம் – உரிமைப் போராட்டம். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

1 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

53 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

65 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

54 0 0