உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மின் பாவனையாளர்கள் மீது 1,750 கோடி ரூபாயை சுமத்துவதற்காகவே மின்கட்டண அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின் பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குருநாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 9000 ரூபா கட்டணம் 6000 ஆகக் குறைக்கப்படும் என்றும், 6000 ரூபா கட்டணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்படும் என்றும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்திருந்தார்.

நாட்டிலுள்ள சுமார் 80 இலட்சம் மின் பாவனையாளர்கள் இந்த பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டனர்.

ஆனால் தற்போது 11 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சாரசபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளமைக்கான காரணங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று மின்சார சபையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக சுயமாக ஓய்வு பெறுவதற்கான முறைமைக்காக 5 ஆண்டுகளுக்கு கடன் தொகையைப் பெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் தவணையை செலுத்துவதற்கு 875 மில்லியன் ரூபா (87.5 கோடி ரூபா) மூன்று மாதங்களில் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செலவை நாட்டிலுள்ள மின் பாவனையாளர்களிடமிருந்தே அறவிட திட்டமிடுகின்றனர்.

மின்சாரசபையின் நஷ்டத்தைக் குறைத்து அதனை மேம்படுத்துவதற்காக கடந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியது.

மின்சாரசபையின் உட்கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்காக மாத்திரம் சுமார் 5 பில்லியன் டொலர் செலவாகும். ஆனால் புதிய சட்டத்துக்கமைய இதற்கான எந்தவொரு புதிய வேலைத்திட்டமும் தயாரிக்கப்படவில்லை. இதற்கு மத்தியில் மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின்பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர்.

அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு 1,750 கோடி ரூபா செலவு மின் பாவனையாளர்கள் மீது சுமத்தப்படவுள்ளது. உண்மையில் இந்த யோசனையை முன்வைத்திருப்பது மின்சாரசபை அல்ல. அமைச்சரவையே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது பெய்த மழை நீர் முறையாக சேமிக்கப்பட்டிருந்தால் இன்று மின் கட்டணத்தை ஒரு சதத்தால் கூட அதிகரித்திருக்க வேண்டியேற்பட்டிருக்காது. இந்த முறையற்ற நிர்வாகத்துக்கு இந்த அரசாங்கமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0