உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையை கொ*லை செய்த மகன்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் 25 வயதுடைய அவரின் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இந்தக் காதல் விவகாரம் தொடர்பில் நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தந்தையை மகன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0