உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அமெரிக்காவின் கோர தாக்குதல்! ரஷ்யா – ஈரான் கடும் கண்டனம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
14 பார்வைகள்

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

வெனிசுலா ஜனாதிபதி பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று ட்ரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் இன்று அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

இதன்பின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், “அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார். மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வெனிசுலா மீதான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ளது.

இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தங்களின் அரசியல் சித்தாந்தத்திற்காக அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அமெரிக்கா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.இந்தச் சூழலை பெரும் கவலையுடன் கவனித்து வருவதாகவும், நிலைமையை ஆராய அவசரக் குழுவைக் கூட்டியுள்ளதாகவும் ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.மேலும் கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0