உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்கா: இம்மானுவேல் மக்ரோன் வரவேற்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
13 பார்வைகள்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் ஆட்சி நடத்தி வருவதுடன், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு இருப்பதை வரவேற்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தும் உள்ளார்.

மேலும் வெனிசுலா நாட்டு மக்கள் நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும், இது வெனிசுலா மக்களுக்கு திருப்புமுனை என்றும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி எட்மண்டோ கோன்சலஸின் புதிய தலைமைக்கு ஆதரவு அளிப்பதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.வெனிசுலா நாட்டை அடுத்து தலைமை தாங்கும் நிர்வாகம் அமைதியான வழி, ஜனநாயக முறை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0