உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை… சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டசின் கணக்கானோர் மரணமடைந்த இரவு விடுதியின் உரிமையாளர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல பேர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தை அடுத்து தங்களால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாலைஸ் மாகாணத்தின் கிரான்ஸ்-மொன்டானா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது Le Constellation மதுபான இரவு விடுதி. நகரின் மிகப்பிரபலமான இந்த விடுதியிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதன் அடித்தளம் முழுவதும் தீ பரவத் தொடங்கியது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 40 பேர்கள் வரையில் உடல் கருகி பலியாகியுள்ளனர். 119 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் பலரது நிலை மோசமாக உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.தீ விபத்தில் கொல்லப்பட்டவர்கள் 40 என சுவிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இத்தாலிய அதிகாரிகள் 47 என தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்தவர்களின் உடல்கள் மிக மோசமான நிலையில் கருகியுள்ளதால், அடையாளம் காணும் பணி தாமதமடைந்துள்ளது.இதனால், பல குடும்பங்கள் தற்போது வேதனை நிறைந்த காத்திருப்பை எதிர்கொண்டுள்ளன. Le Constellation மதுபான இரவு விடுதியின் உரிமையாளர்கள் பிரெஞ்சு தம்பதியான 49 வயது ஜாக் மோரெட்டி மற்றும் அவரது மனைவி 40 வயது ஜெசிகா என்பது ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,ஜாக் மோரெட்டி முதல் முறையாக நடந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அதில், எங்களால் தூங்கவும் முடியவில்லை, சாப்பிடவும் முடியவில்லை, நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தங்களின் இரவு விடுதி உரிய அதிகாரிகளால் மூன்று முறை ஆய்வு செய்யப்பட்டதாக மோரெட்டி கூறியுள்ளார். அத்துடன், அனைத்தும் விதிமுறைகளின்படியே முன்னெடுக்கப்பட்டிருந்தது என்றார்.

ஆனால், அந்தத் தம்பதியினர் சுவிட்சர்லாந்தில் இருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0