உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சிரியா முன்னாள் ஜனாதிபதி ஆசாத் உருவம் பதிக்கப்பட்ட கரன்சிகள் மாற்றம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சிரியாவில் நடந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, முன்னாள் அதிபர் பஷாத் அல் ஆசாத் உருவம் பதித்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய நோட்டுகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.மேற்காசிய நாடான சிரியாவில், 2000ல் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவரது தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இருவரும் சர்வாதிகார ஆட்சி நடத்தினர்.

துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன. 14 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், 2024ல் இந்த கிளர்ச்சிப்படைகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட, பெரும்பாலான நகரங்களை கைப்பற்றின.இதையடுத்து, ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இடைக்கால அரசின் அதிபராக அகமது அல்-ஷரா பதவியேற்றார். அவர் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, சிரியா ரிசர்வ் வங்கி, ஆசாத் மற்றும் அவரது தந்தையின் படங்கள் இடம்பெற்றிருந்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய கரன்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.சிரியன் பவுன்ட்’ எனப்படும் இந்த கரன்சி நோட்டுகளில், ஆசாத் படங்களுக்கு பதிலாக, அந்நாட்டின் தேசிய சின்னமான ரோஜா மலர் மற்றும் பாரம்பரிய விவசாயத்தை குறிக்கும் கோதுமை, ஆலிவ், ஆரஞ்சு, மல்பெரி போன்ற இயற்கை சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த கரன்சி நோட்டுகள், ஜன., 1 முதல் அமலுக்கு வந்தன. ‘பழைய கரன்சிகள் 90 நாட்களுக்கு பின் புழக்கத்தில் இருக்காது; அதற்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0