உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
78 பார்வைகள்

அம்பத்தளையிலிருந்து தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை (03) நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, மொரட்டுவை, ராவதவத்த, சொய்சா-புர, இரத்மலானை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பத்தரமுல்லை பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று சனிக்கிழமை (03) நள்ளிரவுக்கு முன்னர் குழாயை சரிசெய்து நீர் விநியோகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

34 0 0