உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுவிட்சர்லாந்தில் நடந்த பேரவலம்! 30 நொடிக்குள் வெளியேறிய 200 பேர்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 நொடிக்குள் சுமார் 200 பேர் அங்கிருந்து உயிர் தப்ப முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் நேற்று(1.1.2026) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சுமார் 115 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இதில் பலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 நொடிக்குள் சுமார் 200 பேர் அங்கிருந்து உயிர் தப்ப முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் நேற்று(1.1.2026) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சுமார் 115 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இதில் பலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஜனாதிபதி Guy Parmelin தெரிவிக்கையில், இந்தத் தீ விபத்து சுவிட்சர்லாந்தின் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், இத்தகைய சோகம் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், ஷாம்பெயின் போத்தல்களில் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஏற்றியதே இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.அவர்களில் பலர் பதின்ம வயதுடையவர்கள்.

விபத்தை அடுத்து, குறுகலான படிக்கட்டு வழியாக மக்கள் தப்பிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பற்றியும் பெண் ஒருவர் விவரித்துள்ளார்.இதனிடையே, வாலைஸ் மாகாணத்தின் அரசாங்கம் சட்டத்தரணி பீட்ரைஸ் பில்லூட் தெரிவிக்கையில், ஷாம்பெயின் போத்தல்களில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் தான் இந்தத் தீவிபத்திற்குக் காரணம் என்ற செய்திகள் குறித்துத் தன்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடைபெற்று வருகிறது. நடந்த சம்பவத்தின் உண்மையான பின்னணிகளை அது கண்டறியும் என்றும் கூறியுள்ளார்.மாகாண பொலிஸ் ஃபிரடெரிக் கிஸ்லர் தெரிவிக்கையில்,அவசர அழைப்புகள் கிடைக்கப்பெற்ற 2 நிமிடங்களில், அதாவது 1.32 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், உடனடியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், 42 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 12 ஹெலிகொப்டர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிப்பது போன்ற துயரமான பணியை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நேற்று மாலை, உறைபனி குளிரிலும் நூற்றுக்கணக்கானோர் அமைதியாகக் கூடி, மலர்களை வைத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0