உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தனது உடல்நிலை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த ட்ரம்ப்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நிலை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கருத்து தெரிவிக்கையில், நான் முழுமையான” ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன். கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவை விட அதிக வீரியம் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றேன்.

பொதுவாக இதய பாதுகாப்புக்காக 81 மில்லகிராம் ஆஸ்பிரின் பரிந்துரைக்கப்படும் நிலையில், ட்ரம்ப் தினமும் 325 மில்லிகிராம் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.தனது இதயம் வழியாக தடிமனான இரத்தம் செல்வதை நான் விரும்பவில்லை.அதனால் தான் இரத்தத்தை மெலிதாக்க அதிக ஆஸ்பிரின் எடுக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தனது கைகளில் காணப்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை மறைக்க ஒப்பனை (Makeup) பயன்படுத்துவதாகவும், இது ஆஸ்பிரின் பயன்பாட்டினால் ஏற்படும் பக்கவிளைவு (Bruising) என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் தான் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை குறித்துப் பேசிய அவர், அது எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் அல்ல, மாறாக ஒரு சி.டி (CT) ஸ்கேன் மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.உடற்பயிற்சி செய்வது தனக்கு “சலிப்பை” தருவதால், கோல்ஃப் விளையாடுவதைத் தவிர வேறு எவ்வித முறையான உடற்பயிற்சிகளையும் தான் செய்வதில்லை என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0