உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தகாத முறையில் நடக்க முயன்றவரை கோடாரியால் தாக்கி கொன்ற 18 வயது யுவதி!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
59 பார்வைகள்

புத்தாண்டு தினத்தன்று தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற அயலவரை, 18 வயது யுவதி ஒருவர் தற்காப்புக்காக கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் பான்டா (Banda) பகுதியில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,

பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த வேளையில், மதுபோதையில் இருந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவர் குறித்த பெண்ணிடம் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.அங்கிருந்த யுவதியிடம் அத்துமீறி நடந்து கொண்டபோது, தன்னை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் அந்த அங்கிருந்த கோடாரியால் அவரைத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவத்தின் பின்னர், யுவதி தானாகவே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றியதுடன், பெண்ணை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0