உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்படுகிறதா? கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஊழியர்களை (ஆசிரியர்களை) பயன்படுத்துதல் தொடர்பான புதிய வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பாடசாலை நிறைவடையும் நேரத்தை பி.ப. 2.00 மணி வரை நீடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது நிலவும் இயற்கை அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பி.ப. 1.30 வரை தற்போதுள்ளவாறே தொடரும். தரம் 1 மற்றும் தரம் 6 தவிர மற்றைய அனைத்துத் தரங்கள்:2026 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணை ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் 6: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.தரம் 1: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும். புதிய சீர்திருத்தங்களின் கீழ் பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்தாமல், அந்த நேரத்தைக் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0