உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முள்ளியவளை குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
74 பார்வைகள்

வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கு குஞ்சுக்குளத்தின் வாய்க்காலின் பாதிப்பு நிலமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 01.01.2026நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

குறிப்பாக ஏற்கனவே குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் சீரமைப்புப்பணிகள் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த சீரமைப்புப் பணிகளும் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிப்படைந்து காணப்படுகின்றன.

இதனால் குறித்த வாய்க்காலின் அருகிலுள்ள குடியிருப்புக்காணிகளும் மண்ணரிப்பு பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், உரியவகையில் முன்னெடுக்கப்படாமை மற்றும் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினாலுமே இவ்வாறு பாதிப்புநிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பாதிப்புநிலைமையைச் சீர்செய்வதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0