உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் படைத்துள்ள வரலாற்றுச் சாதனை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
73 பார்வைகள்

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டில் அதிகூடிய மருந்து உற்பத்தியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்ய குறித்த கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய உற்பத்தியும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன் அந்த மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மாத்திரைகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக, மருத்துவ வழங்கல் பிரிவினால் வழங்கப்பட்ட அனைத்து முன்பதிவுகளையும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்க அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அத்துடன், 2025 ஆம் ஆண்டில் 05 புதிய வகை மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம் 2025 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

45 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0