உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யேமனில் நிலவி வரும் அரசியல் பதற்றம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிரடி அறிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யேமனில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டிலிருந்து தனது “பயங்கரவாத எதிர்ப்பு” படைப் பிரிவுகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

தெற்கு பிரிவினைவாதிகளுக்கு (STC) ஆயுத ஆதரவு வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்குத் தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, யேமனின் ஜனாதிபதி தலைமை பேரவை தலைவர் ரஷாத் அல்-அலிமி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமீரகப் படைகள் யேமனை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த விவகாரத்தில் யேமன் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சவூதி அரேபியா, யேமனின் முகல்லா துறைமுகத்தில் அமீரகத்தால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக் கப்பல்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.பிரிவினைவாதிகளுக்குச் செல்லவிருந்த ஆயுதங்கள் இவை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சவூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, யேமன் ஜனாதிபதி பேரவை நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளதுடன், அந்நாட்டின் நிலம், நீர் மற்றும் வான்வழிப் போக்குவரத்து எல்லைகள் அனைத்தையும் 24 மணிநேர முற்றுகைக்கு உட்படுத்தி உத்தரவிட்டுள்ளது.இந்த அடுத்தடுத்த நகர்வுகள் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0