உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
68 பார்வைகள்

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கேட்டுக் எல்.சமீம் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரமவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது குறித்தும் கலந்து ஆலோசித்தார்.

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் என்ற வகையில், இதன் போது பிரதானமாக இரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக உப தவிசாளர் கே.எல். சமீம் தெரிவித்தார்.

இதன்படி கடந்த வருடம் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட அம்பாறை பொது வைத்தியசாலையில் தமிழ் மொழி மூல பிறப்புப் பதிவாளர் ஒருவரை நியமிக்கும் விடயத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்தல் விடயம் குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜனும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0