உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி, தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு, புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையைத் தரிசிக்க வந்த மக்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து,மல்வத்து விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மல்வத்து மகா விஹாரையின் பிரதிப் பதிவாளர், ராஜகீய பண்டித தர்ஷனபதி வணக்கத்துக்குரிய மகாவெல ரத்தனபால நாயக்க தேரரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டார். பிரித் பாராயணம் செய்த மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

மல்வத்து மகா விஹாரையின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனையடுத்து, அஸ்கிரி மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி மகா விஹாரையின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

உதயமான புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்த அஸ்கிரி மகாநாயக்க தேரர், மக்களுக்குச் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசு முன்னெடுக்கும் திட்டங்களை புத்தாண்டில் புதிய பலத்துடன் செயற்படுத்த வாழ்த்துத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரி தரப்பு அனுநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்த சவாலை எதிர்கொள்ள அரசு செயற்படுத்திய திட்டம் குறித்து ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு மகாசங்கத்தினர் தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0