உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு, கிழக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

வடக்கில் யார் கைது செய்யப்பட்டாலும் கிழக்கில் யார் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் சட்டத்திற்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

டக்ளஸின் கைதை எதிர்க்கட்சிகள் சார்பாக அரசியல் பழிவாங்கல் என்று சொல்வதை நாங்கள் விரும்பவில்லை. கிழக்கில் நடந்த படுகொலைகளிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களை பழிவாங்குவதாக நாங்கள் கருதவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு புகையிரதம் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் அதன் குறைபாடுகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று இரவு மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0