உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம் – உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு.

யாழ் செய்திகள் 3 ஆண்டுகள் முன்
24 பார்வைகள்

திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணிற்கு திருமணமான நிலையில் அவரது கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார். குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதன்போது அவர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

யாழ் செய்திகள்

காலாவதியான பொருட்கள் விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு, யாழ்ப்பாண மேலதிக நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த…

71 0 0
யாழ் செய்திகள்

யாழில் மின்தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு.!

யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த…

97 0 0
யாழ் செய்திகள்

வலி. மேற்கில் போராட்டத்தில் குதித்த மக்கள்.!

வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு…

117 0 0
யாழ் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை…

62 0 0