உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழில் மோட்டார் சைக்கிள் திருடன் மாட்டினார்

யாழ் செய்திகள் 3 ஆண்டுகள் முன்
20 பார்வைகள்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள செல்வா திரையரங்குக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்தவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான பொலிஸ் குழு திருட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த, 34 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

யாழ் செய்திகள்

காலாவதியான பொருட்கள் விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு, யாழ்ப்பாண மேலதிக நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த…

71 0 0
யாழ் செய்திகள்

யாழில் மின்தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு.!

யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த…

97 0 0
யாழ் செய்திகள்

வலி. மேற்கில் போராட்டத்தில் குதித்த மக்கள்.!

வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு…

117 0 0
யாழ் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை…

62 0 0