உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மடு, பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் அஞ்சலி நிகழ்வுகளுக்காகத் தயார் நிலையில்!

இலங்கை செய்திகள் 13 நிமிடங்கள் முன்
23 பார்வைகள்

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார் படுத்தப்பட்டுள்ளது.

நாளைய தினம் (நவம்பர் 27) அனுஷ்டிக்கப்பட உள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, துயிலுமில்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தி, அலங்கரிக்கும் பணிகள் துயிலுமில்ல பணிக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வளாகம் எங்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, நினைவேந்தல் சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களை போன்றே இம்முறையும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் (27) மாலை நடைபெற உள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

JICA திட்டத்தின் மூலம் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு வாகனங்கள் வழங்கிவைப்பு

யப்பான் நாட்டின் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை திட்டம் (JICA)திட்டத்தின் மூலம் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு பேருந்து ஒன்றும் ஹயஸ் வாகனம் ஒன்றும் கையளிக்கும் நிகழ்வு யாழ்…

30 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 32 இளைஞர், யுவதிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டத்தில்   சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு  18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதி…

28 0 0
இலங்கை செய்திகள்

உரும்பிராயில் தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வு.!

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன்.சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது…

32 0 0
இலங்கை செய்திகள்

ஆவரங்காலில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஆவரங்கால் சர்வோதய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, அங்குள்ள நினைவுத் தூபி…

33 0 0